நவம்பர் 11ல் (11.11.2018) விஐடியில் சாதனையாளர் தினம் - பொதுத் தேர்வில் 100 சதவிகித தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு விருது - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்குகிறார்


நவம்பர் 11ல் (11.11.2018) விஐடியில்சாதனையாளர் தினம் - பொதுத் தேர்வில்100 சதவிகித தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிதலைமை ஆசிரியர்களுக்கு விருது -  அமைச்சர் கே..செங்கோட்டையன்வழங்குகிறார்

 

விஐடியில் வருகிற 11ந்தேதி (11.11.2018) நடைபெறும் சாதனையாளர் தின நிகழ்வில்வேலூர் மாவட்டத்தில் கடந்தாண்டு 10 வதுமற்றும் 12 வது வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவிகித தேர்ச்சி கண்ட 75 பள்ளிகளின்தலைமை ஆசிரியர்களுக்கு ரொக்கப் பரிசுடன்கூடிய விருது விஐடி சார்பில்  வழங்கப்படுகிறதுமாநில பள்ளிக்கல்விஅமைச்சர் கே..செங்கோட்டையன் இதனைவழங்குகிறார்இதில் மாநில வணிக வரி மற்றும் பத்திர பதிவு அமைச்சர்  கே. சி. வீரமணி, மாநில தொழிலாளர் நல அமைச்சர்டாக்டர் நிலோபர் கபில்  ஆகியோர்  கௌரவவிருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.

இது பற்றி விஐடி பல்கலைக்கழகத்தின் செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது:

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும்  அரசு உதவி பெறும் உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும்வகையில் அப்பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும்தலைமை ஆசிரியர்களுக்கு விஐடிபல்கலைக்கழகம் ஆண்டுதோறும் புத்தாக்கப்பயிற்சியை அளித்து வருகிறதுமேலும்பள்ளிகளுக்கு தேவையான அடிப்படைவசதிகளையும் ஏற்படுத்தி தருகிறது.மேலும் 10 வது மற்றும் 12 வது வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெறும் பள்ளிகளின்தலைமை ஆசியர்களுக்கு சாதனையாளர்தினம் என்ற பெயரில் ரொக்கப் பரிசுடன்விருது வழங்கி வருகிறது.

அதன்படி 2017-18 ம்ஆண்டில் 10 வது மற்றும்12 வது வகுப்பு பொதுத் தேர்வில்100 சதவிததேர்ச்சி பெற்ற பள்ளிகளின்தலைமையாசிரியர்களுக்கு விருது வழங்கும்விழா வருகிற 11ந்தேதி (11.11.2018) ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில்  விஐடியில் உள்ள டாக்டர் சென்னா ரெட்டிஅரங்கில் நடைபெறுகிறதுநிகழ்ச்சிக்குவிஐடி வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன்தலைமை வகிக்கிறார்துணைத்தலைவர்கள்சங்கர் விசுவநாதன் ,முனைவர் சேகர்விசுவநாதன் ,ஜி.வி.செல்வம் ,துணை வேந்தர்முனைவர் ஆனந் .சாமுவேல் ஆகியோர்முன்னிலை வகிக்கின்றனர்.இணைத்துணைவேந்தர் முனைவர் எஸ்.நாராயணன்வரவேற்று பேசுகிறார்.

இவ்விழாவில் மாநில பள்ளிக்கல்வி அமைச்சர்கே..செங்கோட்டையன் சிறப்புவிருந்தினராக பங்கேற்று 75 பள்ளிகளின்தலைமையாசிரியர்களுக்கு விருதுகள் வழங்கிகௌரவிக்கிறார்.

நிகழ்ச்சியில் மாநில வணிக வரி மற்றும் பத்திர பதிவு அமைச்சர்  கே. சி. வீரமணி,மாநில தொழிலாளர் நல அமைச்சர் டாக்டர்நிலோபர் கபில்  ஆகியோர்  கௌரவவிருந்தினர்களாக பங்கேற்கின்றனர் இதில்மாவட்ட ஆட்சியர் சி..ராமன்மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் ஆகியோர்பங்கேற்கின்றனர் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது